என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழைய ரூபாய் நோட்டுகள்"
- பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் அதிக விலைக்கு வாங்குவதாக விளம்பரம் வந்தது.
- ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனுாரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 55). இவரது பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம் என விளம்பரம் வந்தது.
இதனை பார்த்த ராஜேஷ் அதில் இருந்த தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் உங்களிடம் எந்த காலத்து நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு உள்ளது என கேட் டுள்ளார். அதற்கு ராஜேஷ் 50 வருடத்திற்கு முந்தைய 5 ரூபாய் நோட்டு இருப்பதாக தெரிவித்தார்.
அதற்கு அந்த நபர் ரூபாய் நோட்டை போட்டோ எடுத்து அனுப்புமாறும் அது பழைய நோட்டுத்தானா என பார்த்து உறுதி செய்து கொள்வதாக தெரிவித்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த நபர் இது பழங்கால நோட்டு தான் இதை நாங்கள் ரூ.4 லட்சத்திற்கு எடுத்து கொள்கிறோம் என கூறி, பின்னர் ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேஷ் ரூ. 35 ஆயிரம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் எதிர் முனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
- பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.
தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.
மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.
மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன.
மத்திய அரசு அறிவித்த காலக்கெடு முடிந்தபிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #OldBankNotes #Demonetisation
தேனியை அடுத்த வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள் (வயது 95). இவரது கணவர் வரதராஜபெருமாள் தேவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து பாப்பாத்தியம்மாள் கடந்த 20 வருடங்களாக தனது மருமகளான மாரியம்மாளின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
அப்போது அவரது படுக்கையில் துணியின் கீழே ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதில் மத்திய அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் 2 லட்சத்து 20 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. கடந்த 24 வருடங்களாக பாப்பாத்தியம்மாள் அரசின் உதவித்தொகை பெற்றுவந்தார். இது தவிர அவரை பார்க்கவரும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தையும் வீட்டாருக்கு தெரியாமல் சேமித்து வைத்து இருக்கிறார்.
மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தெரியாமல் பாப்பாத்தியம்மாள் தனது பேரக்குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தது உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் உறவினர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை அவரது உடல் மீது பரப்பி ஒப்பாரி வைத்து அழுதனர்.
பாப்பாத்தியம்மாளை பராமரித்து வந்த மாரியம்மாளுக்கு 3 மகள்களும், அவர்களுக்கு 6 குழந்தைகளும் உள்ளனர். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பாப்பாத்தியம்மாள் குடும்பத்தினரின் வறுமை கருதி அரசு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் செல்லாத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தி வைத்து உள்ளனர். #demonetisation
இந்தியாவில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த பணம் ரெயில் மூலம் அருகில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்டன.
நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தன. பின்னர் வேன் மூலம் ரிசர்வ் வங்கி கிளைக்கு அதிகாரிகள் அவற்றை கொண்டு சென்றனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் இருந்து 210 பணப்பெட்டிகள் மூலம் ரூ.85 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. இந்த பணப்பெட்டிகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் ஒப்படைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பழைய ரூபாய் நோட்டுகளுடன் சில தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 4.93 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்துடன் தங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும், பணத்தை பரிமாற்றம் செய்யவே இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்தது முதல் சட்ட விரோதமாக பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. #demonetisednotes
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்